மீசாலையில் ரயில் முன் பாய்ந்து பெண் உயிர்மாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ரயில் முன் பாய்ந்து வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(செப்ரெம்பர் 24) புத்தூர் சந்திக்கும், மீசாலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது.

மீசாலை வடக்கைச் சேர்ந்த கிருஸ்ணராசா நாகேஸ்வரி (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

உயிரிழந்தவர் நீண்டநாள்களாக கால் வலியால் அவதியுற்று வந்தார் என்றும், நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிச் சென்ற இவர் ரயிலின் முன்னால் பாய்ந்து, அதனோடு மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்றும் இறப்பு விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article