வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை ஸ்ரீ.துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவப்_பெருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை ( 20.08.2020 ) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் மகோற்சவம் இடம்பெற்று ( 01.09.2020 ) தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார_உடையுடன் வரும் அடியவர்கள் மட்டுமே வழிபாடுகளுக்காக ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர்
மகோற்சவத்தில்_பிரதான__உற்சவங்கள்
கொடியேற்றம் — 20.08.2020 (வியாழக்கிழமை)
[முற்பகல் 10.00 மணி]
திருமுறைத் திருவிழா — 22.08.2020
(சனிக்கிழமை)
[மாலை 05.00 மணி]
தங்கரதத் திருவிழா — 24.08.2020
(திங்கட்கிழமை)
[மாலை 05.30 மணி]
திருமஞ்சத் திருவிழா — 25.08.2020
(செவ்வாய்க்கிழமை)
[மாலை 05.00 மணி]
வேட்டைத் திருவிழா — 28.08.2020
(வெள்ளிக்கிழமை)
[பிற்பகல் 01.00 மணி]
கைலாச வாகனத் திருவிழா — 28.08.2020
(வெள்ளிக்கிழமை)
[மாலை 05.00 மணி]
சப்பறத் திருவிழா — 29.08.2020 (சனிக்கிழமை)
[மாலை 4.00 மணி]
தேர்த் திருவிழா — 30.08.2020
(ஞாயிற்றுக்கிழமை)
[காலை 09.00 மணி]
தீர்த்தத் திருவிழா — 31.08.2020
(திங்கட்கிழமை)
[காலை 08.30 மணி]
கொடியிறக்கம் — 31.08.2020 (திங்கட்கிழமை)
[மாலை 6.00 மணி]
பிராயச்சித்த அபிஷேகம் — 01.09.2020
(செவ்வாய்க்கிழமை)
[காலை 06.00 மணி]
வைரவர் பொங்கல் — 01.09.2020
(செவ்வாய்க்கிழமை)
[மாலை 3.00 மணி]
மகோற்சவ_காலங்களில்_பின்பற்றவேண்டிய
COVID_19_சுகாதார_பாதுகாப்பு_நடைமுறைகள்
ஆலய__நடைமுறைகள்
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும்
முகக்கவசம் அணிந்து வருதலை உறுதிப்படுத்தல் வேண்டும்
கை தொற்று நீக்கல் செய்வதை உறுதிப்படுத்தல் வேண்டும்
ஆலயத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கையினை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருத்தல் வேண்டும்
ஏனைய__நடவடிக்கைகள்
திருவிழாவில் காவடி , தூக்குக்காவடி , கற்பூரச்சட்டி , அங்கபிரதட்சனை செய்வது தடை செய்யப்பட வேண்டும்
ஆலய வளாகத்தில் வியாபார நிலையங்கள் அமைப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.
அன்னதானம் , தண்ணீர் பந்தல் அமைப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்
ஆலயத்தில்__வரும்__அடியார்களை__கட்டுப்படுத்தும்__நோக்கத்திற்காக
ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் கலாச்சார உடையுடன் வருபவர்களை மட்டுமே அனுமதித்தல்