06-10-1990 அன்று அனலைதீவில் இருந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றபோது கடலில் நிகழ்ந்த படகுவிபத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு நாளன்று அனலைதீவு கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
06-10-1990, சனிக்கிழமை அன்று இந்தியாவில் இருந்து அனலைதீவு மேற்குக்கடற்கரைக்கு வந்து சேர்ந்த இந்திய மீனவரின் படகு மூலம் அனலைதீவு மக்கள்எழுபத்தொன்பது பேரை அகதிகளாக ஏற்றிக்கொண்டு படகு இந்தியாவைநோக்கிப் பயணித்தவேளை நடுக்கடலில் மூழ்கியதால் அதில் பயணம் செய்தஅனலை மக்கள் மற்றும் சக ஊர் மக்கள் 66 பேர் பலியாகியிருந்தனர்.
இத் துயரச் சம்பவத்தில் பலியாகியவர்கள் நினைவாகவே ஊர்மக்களால் கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.