தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொழும்பு தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்குநேற்றையதினம் (ஒக். 07) குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலைமாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் எனபொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேசபாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்துதாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்தசம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தைபொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காககொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானைபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article