ஹோர்முஸை மீட்கும் விவகாரம் – நேட்டோ பயங்கரவாதிகள் என சாடும் ட்ரம்ப்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ கூட்டணி நாடுகளை கடுமையாக விமர்சித்து, ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் உதவ மறுப்பதால் அவர்களை “cowards” பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டியுள்ளார்.

NATO குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், “அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ ஒரு பலவீனமான அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அணு சக்தி ஆயுதங்கள் வைத்திருக்கும் ஈரானைத் தடுக்க போரில் இணைய அவர்கள் விரும்பவில்லை.

இப்போது அந்தப் போர் இராணுவ ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கு ஆபத்து மிகக் குறைவாக இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக Strait of Hormuz நீரிணை முடக்கம் இருப்பதாக டிரம்ப் கூறினார்.

“இந்த நீரிணையை திறப்பது மிகவும் எளிதான இராணுவ நடவடிக்கை. ஆபத்து மிகக் குறைவு. ஆனால் அவர்கள் உதவ விரும்பவில்லை. நாங்கள் இதை நினைவில் வைத்துக்கொள்வோம்,” என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை அலைச்சலின் பின்னணியில் வெளியாகியுள்ளன

Share this Article