வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தரம் ஒன்பதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக வாரத்தின் ஏழு நாட்களும் தனியார் கல்வி நிலையங்ளில் மாணவர்கள் முடங்கி இருப்பதால் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதீத மன உழைச்சலுக்கு ஆளாவதுடன் மாணவர்கள் சமயக் கல்வி மற்றும் ஒழுக்க கல்வி செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது மிக மிக குறைவாக காணப்படுகின்றது.
யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று(ஜூன் 9) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தரம் ஒன்பதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன
01) பெற்றோர்களுக்கு சமயம் மற்றும் ஒழுக்க கல்வியின் அவசியம் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
02) யூலை முதலாம் திகதி தொடக்கம் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தரம் ஒன்பதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
03) தனியார் கல்வி நிலையங்கள் சுகாதா வழிகாட்டலின் அடிப்படையில் இயங்க வேண்டும்
04) தனியார் கல்வி நிலையங்கள் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் பதிவு செய்தல் வேண்டும்.
05) தனியார் கல்வி நிலையங்களில் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் ஆன்மீகம் சமூகம் பற்றிய விடயங்களை போதிக்க வேண்டும்.
எனவே இத் தீர்மானங்களை தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் முறையாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் நாம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ் தீர்மானங்களுக்கு முரனாக செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 0212241726 என்ற எமது இலக்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு நாம் பொதுமக்களை தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.
ஆரோக்கியமான நல்ல ஒழுக்கமுள்ள சமூகத்தின் இருப்பு என்பது நல்ல மாணவர்களின் இருப்பிலேயே தங்கியுள்ளது,
என்பதை சகலரும் புரிந்து தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவது அனைவரினதும் கடமையாகும்.