By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வெடுக்குநாறி  செல்ல மக்களுக்கு அனுமதி! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வெடுக்குநாறி  செல்ல மக்களுக்கு அனுமதி! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வன்னிச் செய்திகள்

வெடுக்குநாறி  செல்ல மக்களுக்கு அனுமதி! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Last updated: 2023/04/24 at 9:07 PM
Published April 24, 2023 275 Views
Share
2 Min Read
SHARE

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்கக் கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பொலிஸார் இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை. யாரென்று தெரியாது தொடர்ந்து விசாரணைகளை முன்னேடுப்பதாக சொல்கின்றனர்.

கடந்த தினத்தில் மேலதிகமாக அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதற்கமைவாக இன்று குறித்த இடத்தில் நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை அவர்களே சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொல்லியலுக்குரிய பிரதேசமென்றும் இன்று நாங்கள் செய்த விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்கு அரச சட்டத்தரணியும் உதவியை நாடியுள்ளதாகவும் அதற்காக பிறிதொரு தினத்தையும் கேட்டிருந்தார்கள்.

எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உ உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள். மரத்தையோ கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது. அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும் பொலன்னறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதிவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

Anarkali April 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குருநகர் கடற்கரைப் பகுதிகளில் இன்று துப்புரவுப் பணி முன்னெடுப்பு!
Next Article தனியார் ஊழியர்கள் எவரும் பணிக்குச் செல்லத் தேவையில்லை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?