குருநகர் கடற்கரைப் பகுதிகளில் இன்று துப்புரவுப் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரைப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை (ஏப்ரல் 24) முன்னெடுக்கப்பட்டது.
கடல்சார் சுற்றுச்சூழல் அதிகாரசபை மட்டும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், பொலிஸார், இராணுவம் என்பன இணைந்து குறித்த துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குருநகர் கடற்கரை அண்மித்த பகுதிகளில் அதிகளவான குப்பைகள் சேர்ந்து உள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டன.
துப்புரவு செய்யும் பணியில் இராணுவம் பொலிஸார், இராணுவத் தளபதி யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Share this Article