செளபாக்கியா சமுர்த்தி விசேட வீடமைப்புத் திட்டம் – 2020
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குட்பட்டு சௌபாக்கி ய விஷேட வீடமைப்பு திட்டத்திற்கு தோ்வு செய்யப்பட்ட ஜேஃ01 கிராம சேவையாளா் பிாிவினை சோ்ந்த பயனாளி புரவிப் புயல் காரணமாக வீட்டுத்திட்ட வேலையினை ஆரம்பிக்க தாமதமான நிலையில் நேற்றைய தினம் (ஜனவாி 04) வீட்டுத்திட்ட வேலைகைளை ஆரம்பிக்கும் முகமாக வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நெடுந்தீவின் பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்திய சோதி அவா்கள் கலந்து கொண்டு முதற்கல்ல வைத்து ஆரம்பித்து வைத்தாா்.தொடா்ச்சியாக சமுா்த்தி முகாமையாளா் திரு.இ.ராஜ்பவன் அவா்களும் சமுா்த்தி உத்தியோகத்தா் திரு.யுட்றென்ரன் அவா்களும் குறிப்பிட்ட பயனாளியான யோன் வில்லியம் அவா்களும் சம்பிரதாயமாக அடிக்கல்லை நாட்டி வைத்து செயற்றிட்டத்தினை ஆரம்பித்தனா்.
இவ் வீட்டை கட்டி முடிப்பதற்கு 1200 000/= இட்சம் ரூபாவுக்கு மேல் கணிப்பிடப்பட்ட போதும் இதன் 50 வீதத்தினை சமுர்த்தி தலைமையகமும் , மிகுதி 50 வீதத்தினை இப் பயனளியும் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போதைய நிலையில் பயனாளிகள் 100 வீதத்தையும் அரசிடமிருந்து எதிர்பார்க்கும்போது இப் பயனளி தனது அடிப்படைத்தேவை கருதி இச் செயற்பாட்டினை பொறுப்பேற்று மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.