விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பாக நேற்று ( ஓகஸ்ட் 4) முற்பகல் ஒன்றுகூடிய வலவ வலய விவசாயிகள் தமது செய்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அநுராதபுரம் – அங்குனுகொலபெலஸ்ஸ நகரத்தில் இன்று முற்பகல் விவசாயிகளின் எதிர்ப்பு பேரணியொன்று ஆரம்பமானதுடன், மகாவலி அரச விவசாயிகளின் ஒன்றியமும் அகில இலங்கை விவசாய சம்மேளனமும் இந்த பேரணியை ஏற்பாடு செய்தன.
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு உடனடியாக நீரை விநியோகிக்குமாறு இதன்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாய அமைச்சரின் வீட்டை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்ட போது, அமைச்சர் வீட்டில் இல்லை என தெரிவித்து பொலிஸார் பேரணியை தடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் வீதியில் கலந்துரையாடல் நடத்தியதை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே, வலவ விவசாயிகள் எம்பிலிப்பிட்டிய நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்பிலிப்பிட்டிய நகரில் விவசாயிகள் முன்னெடுத்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.