கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அக்கராயன் விநாயகர்விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கனகபுரம் விளையாட்டுக்கழகத்தை 4 : 0 என்ற கோல் கணக்கில் உருத்திபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
உருத்திபுரம் விளையாட்டுக்கழகம் சந்திரோதையா விளையாட்டுக் கழகத்தை 2:0 என்ற கோல் கணக்கிலும் பரந்தன் மத்தி விளையாட்டு கழகத்தை 3:0 என்ற கோல் கணக்கிலும்அரையிறுதிப் போட்டியில் இளைஞர் வட்டம் விளையாட்டுக்கழகத்தை 11:02 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகிய நிலையில் கனகபுரம் விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கணக்கில் வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
இச் சுற்றுப் போட்டியின் ஆட்டநாயகனாக உருத்திபுரம்விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த தனுஷ், சிறந்த கோல் காப்பாளராகஉருத்திபுரம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.