வவுனிக்குளத்தில் மூழ்கிய 03 நபா்களின் நல்லடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட பிரதேசமான வவுனிக்குளத்தில் நேற்று (டிசம்பா் 19) கப்ரக வாகனம் குளத்தில் வீழ்ந்து மரணம் இடம் பெற்றது.

வவுனிக்குளம் வான் கட்டு மேவிப்பாய்வதை பாா்வையிடுவதற்காக மகனின் வேண்டுகோளை ஏற்று நேற்றைய தினம் பாா்வையிட சென்ற சமயமே இச்சம்பவம் இடம் பெற்றது

தந்தை இரண்டு பிள்ளைகள் மகனுடைய நபன்பன் என நான்கு போ் சென்ற போதும் மகன் மட்டும் தப்பியுள்ளாா் ஏனைய மூவரும் மரணமடைந்துள்ளனா் தந்தை மற்றும் மகளுடைய சடலங்கள் மிக கடினத்தின் மத்தியில் நேற்று அதிகாலையே மீட்கப்பட்டது

மூவருடைய சடலங்களும் இன்று உறவினா்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில நல்லடக்கம் நாளை இடம் பெறவுள்ளது கிராமமே மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Share this Article