வரலாற்று நிகழ்வாகியது முத்திரை வெளியீடு – “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது “நெடுவூர்த்திருவிழா” 2024 இன்  நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளின் சிறப்பாக முத்திரை வெளியீடு இடம்பெற்றது.

நெடுந்தீவின் சுற்றுலா இடங்களை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட, நிகழ்வின் வரலாற்று ஆவணமாக முத்திரை வெளியீடு இடம்பெற்றது.

இலங்கை அஞ்சல் திணைக்கள சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபதி ராஜித கே. ரணசிங்க அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு முத்திரையினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியினை இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நிகழ்வில்கலந்து கொண்ட விருந்தினர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் போன்றோருக்குமான பிரதிகளை இலங்கை அஞ்சல் திணைக்கள சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபதி ராஜித கே. ரணசிங்க அவர்கள் வழங்கிவைத்தார்.

 

Share this Article