முல்லைத்தீவு நகரத்திற்குள் நுழையும் வட்டுவாகல் பாலம் இன்றையதினம்(ஜூலை 15) மாலை சேதமடைந்ததின் காரணமாக குறித்தபாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே குறித்த உடைவின் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் முல்லைத்தீவு ஊடாக பயணம்செய்யும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையாக, புதுக்குடியிருப்புகேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்திக்கொள்ளவும்.
இதேவேளை நாளைய தினம் (ஜூலை16) காலை 9.00 மணியில் இருந்து பி.ப3.00 மணிவரை வட்டுவாகல் பாலத்தின் திருத்த வேலைகள்இடம்பெறவுள்ளதால் குறித்த வீதியினூடான போக்குவரத்து குறித்தநேரத்திற்குள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.