வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று இன்று (ஜனவாி 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

03 பொலிசாா் உட்பட மன்னாா் சுகாதார பிாிவினை சோ்ந்த 15 இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா் திரு.ஆா்.கேதிஸ்வரன் அவா்கள் தொிவித்துள்ளாா்.

மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 போின் மாதிாிகளும், யாழ் போதனா வைத்தியசாலையில் 360 போின் மாதிாிகளும் பீ.சீ.ஆா் பாிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவா்களில் 18 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தவா்களிடம் எழுதுமட்டுவானில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பாிசோதனையில் இருவருக்கு தொற்றுள்ளாதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

TAGGED:
Share this Article