யாழ்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் இன்று (டிசம்பர் 06) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலமையில் இடம் பெற்றது.
புரவித்தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களது நிலமை தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது.
கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் பாதிப்புக்கள் குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை நிலமைக்கு கொண்டு வருதல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களுக்கான அத்தியாவசிய பங்கர்களை மாத்திரம் அழைத்து இடம்பெற்றது.
கிடைக்கும் வளங்களைக் கொண்டு எவ்வாறான உதவிகளை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. நீர்; வடிந்தோடாமையால் வெள்ள நிலமைகள் ஏற்பட்டுள்ளது எனவும் உள்ளுராட்சி சபை முயற்சி எடுக்க வேண்டும் அதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிவுப்பொருட்களை கண்டவிடத்தில் வீசுதல் வடிகால்களை முடுதல் போன்ற விடயங்களால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இடம் பெற்று இருக்கின்றது.
கட்டிடங்கள் அமைக்கும் போதும், வடிகால்களை அமைக்கும் போதும் சரியான முறையில் இயற்கையாக வெள்ளம் வடிந்தோடக்கூடிய நிலமையில் அமைக்கப்படல் வேண்டும் யாழ் மாநகரசபை தொடர்ச்சியாக இவ்விடயங்களை மேற்கொள்ளும் போது வெள்ள நிலமையை சமாளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
புயல் காரணமாக ஏற்பட்ட சேதவிவரங்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கைகள் தயாரிக்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளோம். எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும், ஏனையவற்றை உரிய தகவலைப் பெற்று செயற்படுத்துவதற்கும் தயாரவுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டது,
கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.