நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள் – சுகாதார அமைச்சிற்கு அர்ச்சுனாஎம்.பியுடன்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாககூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்றஉறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்றுகலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர்சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கமற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை நேற்றையதினம் (டிசம்பர் 23) சந்தித்துகலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த  தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்குஅழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாகஅமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும்இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article