யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களுக்கு இன்று நெடுந்தீவில் அமோக வரவேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தனும்,  யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன்  அவர்கள் அரசாங்க அதிபராக பதவியேற்று முதன் முறையாக இன்றையதினம் (ஜூலை 26) நெடுந்தீவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக  நெடுந்தீவுக்கு  வருகைதந்தபோது  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

வரவேற்பு நிகழ்வில்  துறைமுகப் பகுதியில் வைத்து மலர்மாலை அணிவித்து ஆரத்தி எடுக்கபட்டது.

இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலர், அலுவலர்கள், பல நோ. கூ. சங்க தலைவர், பணியாளர்கள் , யாழ் மாவட்ட கிளையின் சாரண நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

Share this Article