யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் மாபெரும் தொழிற் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த தொழிற் சந்தை நடாத்தப்படவுள்ளது.

தொழில் நாடும் உங்களுக்கு தொழிலொன்றைத் தெரிவு செய்வதற்கான அரியதோர் சந்தர்ப்பம் இந்த தொழிற்சந்தை ஊடாக வழங்கப்படவுள்ளது. தொழில் தேடுபவர்கள் தங்கள் சுயவிபரக்கோவையினை எடுத்து வரவும்.

தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்த்தல்.

தனியார் உற்பத்தி நிறுவனங்கள்
ஆடை உற்பத்தித்துறை
பாதுகாப்புச் சேவை
சந்தைப்படுத்தல் துறை
ஹோட்டல் துறை
தாதியர் வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
கணக்கியல் துறை
காப்புறுதித் துறை

தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் பற்றிய தகவல்கள்

கணினித்துறை
தாதியர் பயிற்சி நெறி
ஏனைய தொழிற்பயிற்சி நெறிகள்
கப்பற்துறை தொடர்பான தொழிற்பயிற்சி
ஹோட்டல் முகாமைத்துவம்

Share this Article