யாழ் போதனா வைத்தியசாலையில் Dr . மலரவனின் தலைமையில் கடந்த 5 நாட்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை (Cataract Surgery) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் Sir General Kotelawala Defence University ஆகியவற்றின் கண் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலை உத்தியோகத்தர்கள் மேற்படி சிகிச்சை முகாமை சிறப்பாக செய்து முடித்தனர்.
Assist RRR நிறுவனம் மேற்படி நிகழ்விற்கான ஒழுங்கமைப்பில் பெரும் பங்களிப்பைச் செய்தது. சத்திர சிகிச்சைக்கு தேவையான கண் வில்லைகள் மற்றும் பொருட்களை அலாக்கா Foundation மற்றும் ஆனந்தா Foundation வழங்கி வருகிறது.
பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் மேற்படி சிறப்பு முகாம் வெற்றிகரமாக நிறைவேறியது.
இறுதி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.Anoj Rodrigo கலந்து சிறப்பித்தார்.