யாழில் அதிக மருந்துப் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அதிகளவான மருந்துப் பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இராசா சிவபாதம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதிகளவான மருந்துப் பாவனையால், உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், கடந்த 08 மாத காலமாக உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொண்டு வந்தவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Share this Article