நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது கடந்த ஜூலை 12 இல் மூழ்கிய சுற்றுலாப் பயணிகள் படகு இதுவரை மீட்கப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றே குறிப்பிட்ட படகு மூழ்கிய இடத்தில் அடையாளமிடப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து 04 நாட்களாக இடம்பெற்ற போதும் குறித்த படகினை காணவில்லை என தேடுதலில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
மன்னார் , நயினாதீவு , நெடுந்தீவு , புங்குடுதீவு ஆகிய இடங்களைச் சேர்ந்த சுழியோடிகள் அழைக்கப்பட்டு நீண்ட தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை படகினை மீட்க கடற்படையினரது உதவியினை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.