முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (09/11) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.