புங்குடுதீவு கிழக்கு, தல்லையப்பற்றை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல. 87, கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் வேழவேந்தன் அவர்கள் நேற்று (12.11.2026) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தெய்வேந்திரன் – நாகேஸ்வரி தம்பதியரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கோபாலு – தங்கமுத்து தம்பதியரின் மருமகனும், ரதீஸ்வரியின் அன்புக் கணவரும், தனவேந்தன் (USA), நாகதர்சினி (சம்பத் வங்கி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாரா (USA), பிரதீப் (DFCC வங்கி), சண்முகலிங்கம் (GS), நாகேஸ்வரி, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி மற்றும் நடேசலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும், அபிஷன், விபிஷன், மகிஷன் ஆகியோரின் ஆருயிர் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் இல.87, கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.