மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் பனிப்பூச்சித் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது என்று மன்னார் மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் மதனராஜ் குலாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மன்னார் மாவட்டத்தின் நானாட்டன், வஞ்சிக்குளம், ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கையில் பனிப்பூச்சித் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.
பனிப்பூச்சி நெல்லின் பச்சையத்தை உணவாக உட்கொள்ளும். அதனால் உணவுத் தொகுப்பு, ஒளித்தொகுப்பு என்பன பாதிப்படைந்து விளைச்சல் குறையும்.
சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை பனிப்பூச்சித் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
விவசாயிகள் பனிப்பூச்சித் தாக்கத்தை அடையாளம் காணும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் – என்றார்.