உணவு அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நாவற்குழியில் நடந்துள்ளது. யோகராஜா குகனராஜன் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இவர் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

 

Share this Article