மண்டைதீவு தெற்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் நேற்று (மே 8 ) காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 85 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வடபகுதி கடற்படை கட்டளையின் படி வெலுசுமண பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மண்டைதீவின் தெற்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள புதர் செடிகளில் இருந்து 03 மூட்டை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அந்த மூட்டைகளில் சுமார் 85 கிலோ 450 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா 22 பொதிகள் இருந்ததாகவும், அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் மொத்த மதிப்பு 28 மில்லியன் ரூபா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.