By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
தீவகச் செய்தி

அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Last updated: 2024/06/25 at 4:25 PM
Published June 25, 2024 251 Views
Share
2 Min Read
SHARE

மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினையும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனலைதீவு பிரதேச மக்கள் பொது அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் என ஒன்றிணைந்து இன்று (ஜூன் 25) தமது பிரதான போக்குவரத்து மார்க்கமான இறங்குதுறையின் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விரிவாக்கம் கருதி தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று (ஜூன் 25) காலை 6 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் குறித்து தெரியவருகையில் –
அனலைதீவு மக்கள் தமது இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக கொண்டு கடலரிப்பால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, அனலைதீவு ஐயநார் கோயில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ஆலயத்தில் அகற்றப்படும் இடிபாடுகளை அனலைதீவு இறங்குதுறையின் கரையோர பகுதியில் கொட்டிவருகின்றனர்.

கொட்டப்படும் இடிபாடுகளால் இறங்குதுறையின் இரு கரைப் பகுதியும் சற்று அகலமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு சில அரசியல் சுயநலவாதிகளால் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை காரணம் காட்டி கொட்டப்பட்ட இடிபாடுகளால் கடல் பகுதி நிரவப்படுவதாக தெரிவித்து துறைசார் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த திணைக்களம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் கொட்டப்பட்ட இடிபாடுகளை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்தே அனலைதீவு மக்கள் பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து  தமது இறங்கதுறையின் நலன்களை கருத்திற்கொண்டு தாம் முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை தடுத்தைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போக்குவரத்தை முடிக்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

அத்துடன் குறித்த இறங்குதுறையின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை அவரது யாழ் மாவட்ட பிரதிநிதிகளிடம் கையளித்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் விரைவில் தான் நேரில் வருகைதந்து அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினைகள்,  அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் கிடைக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR June 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தால் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!
Next Article காரைநகரில் மினி சூறாவளி – குடிசை மீது விழுந்த பனை மரம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?