பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
இந்த நடவடிக்கையில் சாவகச்சேரிப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகளை சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஆடுகளும், மாடுகளும் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிந்துள்ளன. அதையடுத்தே யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பணித்துள்ளார்.