எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்களின் இடது கையின் சிறிய விரலில் மை பூசப்படமாட்டாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாறாக, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை அடையாளம் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தேர்தல் ஆணையம் இதை அறிவித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலில் மை பூசியிருந்தோம். அதனால், இன்னும் பலரின் விரல்களில் மை அடையாளம் நீங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அனைத்து முதற்கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்றுடன் (நவம்பர் 11) நள்ளிரவு தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நிறைவடையும்.
இம்முறை 10ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.