பேருந்துப் பயணத்தில் பொறுப்புணர்வை விதைக்கும் புதிய முயற்சி – வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பேருந்துப் பயணிகளிடையே பாதுகாப்பான பயணம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “பாதுகாப்பான பேருந்துப் பயணம்” விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று (31.07)காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில், பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய 12 முக்கியமான பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு வழிகாட்டல்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

பேருந்தில் ஒழுங்கைப் பேணுதல், இருக்கைகளை முறையாகப் பயன்படுத்துதல், சாரதி மற்றும் நடத்துநரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் மற்றும் பேருந்தின் பாதுகாப்பைப் பேணுதல் போன்ற முக்கிய விடயங்கள் இவ்விழிப்புணர்வு ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பயணிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு சிறிய சிந்தனையை உருவாக்கி, அதன் மூலம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும்” என இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share this Article
Leave a comment