நெடுந்தீவு நண்பா்கள் வட்டம் அமைப்பினால் 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் செயற்றிட்டம் தொடா்பாக பெற்றோ்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நண்பா்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்ட்டது.
தரம் 02 – தரம் 05 வரையான வகுப்புக்கள் தரம் 10, தரம் 11 மற்றும் உயா்தர வகுப்பு மாணவா்களுக்கான கற்றல் செயற்பாடுகளினை இவ்வருடத்தில் ஆரம்பிக்கும் முகமாக மாணவா்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று கலந்துரையாடல் நிகழ்விற்கான அழைப்பிதல்களினை நண்பா்கள் வட்ட உறுப்பினா்கள் வழங்கியதன் அடிப்படையில் மத்தி மற்றும் கிழ்க்கு மாணவா்களின் பெற்றோா்களது சந்திப்பு கடந்த சனிக்கிழமை (ஜனவாி 09) தலமைச் செயலகத்தில் இடம் பெற்றது.
அது போல் ஞாயிற்றுக்கிழமை மேற்கு பிரதேச பெற்றோா்களுக்கான கலந்துரையடல் நிகழ்வு மேற்குப் பிரதேசத்தில் இடம் பெற்றது.
மேற்குறிப்பிட்ட கல்வியாண்டுகளில் கல்வி கற்கின்ற மாணவா்களிற்கு கல்வி மற்றும் அவா்களது ஆளுமை ஆற்றல்களை வளப்படுத்தும் செயற்பாடுகளினை செயற்படுத்தல் தொடா்பாக நண்பா்கள் வட்டத்தினால் விளக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிா்வரும் நாட்களில் மேற்கொள்ளபடும் கல்விச் செயற்பாடு தொடா்பாகவும் பெற்றோா்களுக்க விளக்கம் வழங்கப்பட்டது,
கொவிட் 19 நிலமைகளைக் கருத்திற் கொண்டும் கால நிலை மற்றும் பௌதிக சுழல்களைக் கருத்திற் கொண்டு இன்று முதல் (ஜனவாி 11) கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நண்பா்கள் வட்டத்தின் கல்விக்குழு ஆரம்பித்துள்ளது.
இக்கலந்துரையாடல் நிகழ்வுகள் கல்விக் குழுவின் தலைவா் திரு.பா.அன்ரன் கிறிஸ்யன் தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன், முன்னாள் வடகிழக்கு மாகாண ஆரம்ப கல்வி ஆசிாிய ஆலோசகா் திரு.செ.மகேஸ் மற்றும் நண்பா்கள் வட்டத்தின் ஆலோசகா் திரு.ஏ.எவ்.ஜேக்கப் அவா்களும் கலந்து கொண்டு கருத்துரைகளையும் எதிா்கால செயற்பாடுகள் தொடா்பாகவும் கருத்துரைத்தனா்.