புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (ஜனவரி 18) மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்தவராகவும், புங்குடுதீவு மடத்துவெளி பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் (வயது 38) என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து குளிக்கச் சென்றவர், பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.