சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன
புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்களின் 31வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் செயலாளர் திரு கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் இருபதினாயிரம் நிதியுதவியில் சென்சேவியர் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களான ஜீவா, ராகுலன், ரதீஸ் , சுபதீபன், கெனடி ,லம்பேட், தனுசன் , பௌஸ்ரின் அருண், ஹெல்சன் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பிலும் புங்குடுதீவில் மூன்று கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன .
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கடற்கரையில் காணப்படுகின்ற பாரிய நன்னீர் கிணறானது சுத்தமாக்கப்படாமலேயே காணப்பட்டிருந்தது . இக் கிணற்றினை 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையிலும் கடந்த 17ஆண்டுகளாக சுத்தமாக்கப்படாமலேயே காணப்பட்டிருந்தது. இந் நிலையில் சூழக அமைப்பினரால் பாரிய கிணறு சுத்தம்செய்யப்பட்டதோடு அப் பகுதியில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கின் முன்னால் காணப்படுகின்ற இரு நன்னீர் கிணறுகளும் அன்றைய தினம் நீண்டகாலத்தின் பின்னர் சுத்தம் செய்யப்பட்டன .இச் செயற்பாடுகளில்சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களான கருணாகரன் குணாளன், சண்முகராஜா தரங்கன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.