பெண் ஊழியர் மீது சக ஊழியர் கத்திக்குத்து! தன்னையும் வெட்டினார்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களம் ஒன்றில் பெண் ஊழியர் மீது சக ஊழியர் கத்திக்குத்து! தன்னையும் வெட்டினார்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து வன்முறைச் சம்பவத்தினால் ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த திணைக்களத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது சக ஊழியர் கத்தியால் குத்தியதால் பெண் ஊழியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட ஊழியர் திணைக்களத்தின் குளியல் அறைக்குள் சென்று கதவைப்பூட்டியிருக்கின்றார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற (சிவில் உடையில்) பொலிஸார் அவரை வெளியே அழைத்தபோது அவர் வெளியே வராத நிலையில்,

கையடக்கத் தொலைபேசியின் கமெராவின் உதவியுடன் உள்ளே பார்த்தபோது அவரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து கதவின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருவரும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது

Share this Article