பாணுக்கான கட்டுப்பாட்டு விலை கொண்டு வரப்படும்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

450 கிராம் பாண் ஒரு இறாத்தால் 130 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் பாணுக்கான கட்டுப்பாட்டு விலையைகொண்டுவர வேண்டியிருக்கும் என நுகர்வோர் விவகார அதிகார சபைதெரிவித்துள்ளது.

சிறிய கடைக்கு 1 இலட்சம் ரூபாவும், ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலைக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபா வரையும் அபராதம் விதிக்க முடியும் எனசோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய்இரசிங்க தெரிவித்தார்.

பாணுக்கு நிலையான விலை இல்லை என்றும் சில பாண்கள் உரிய நிறையில்இல்லை என்றும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினர் அவ்வப்போது குற்றம் சாட்டிவந்தனர்.

அதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபை இது தொடர்பாக அவ்வப்போதுசோதனை நடத்தியது.

இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி, பாணின் நிறைகுறித்து  நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தலும்வெளியிடப்பட்டது.

ஒரு இறாத்தல் பாணின் குறைந்தபட்ச எடை 450 கிராமும்  அரை பாணின்குறைந்தபட்ச எடை 225 கிராமும் இருக்க வேண்டும் என்று அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண்இறாத்தலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கைவெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Share this Article