By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பலஸ்தீன மக்களின் விடியலுக்காக நாங்களும் நிற்கின்றோம்!- தூதுவருடனான சந்திப்பில் சஜித் உறுதி!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பலஸ்தீன மக்களின் விடியலுக்காக நாங்களும் நிற்கின்றோம்!- தூதுவருடனான சந்திப்பில் சஜித் உறுதி!
இலங்கைச் செய்தி

பலஸ்தீன மக்களின் விடியலுக்காக நாங்களும் நிற்கின்றோம்!- தூதுவருடனான சந்திப்பில் சஜித் உறுதி!

Last updated: 2023/10/17 at 10:48 AM
Published October 17, 2023 432 Views
Share
2 Min Read
SHARE

பலஸ்தீன மக்களின் விடியலுக்காக இலங்கை மக்களோடு தாமும் என்றும் முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்டை நேற்று(ஒக்ரோபர் 16) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் கடைசி ஆக்கிரமிப்பு நாடான பலஸ்தீன தேசத்தினதும் மக்களினதும் விடியலுக்கான தீர்வாக ஐக்கிய நாடுகள் சபை இறுதியாக நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சட்டங்கள்,சர்வதேச சமவாயங்கள், மனித உரிமை பிரகடனங்களை நடைமுறைப்படுத்த சர்வதேசம் அர்ப்பணிப்புடன் தலையிட வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் சில நாடுகளின் ஒரு தலைப்பட்ச போக்குக்கு இடமளிக்க முடியாது என்றும், அமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட சர்வதேசம் கூடிய கரிசனையோடு செயற்பட உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் தூதுவருடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும், ஜனநாயக ரீதியிலான தீர்விலேயே விடியலை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சு மேசைக்கு வந்து சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் இப்பிரச்சினையைத் தீர்க்க உலகத் தலைவர்கள் வரலாற்றை ஆராய்ந்து சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

1948 அரபு-இஸ்ரேல் போர் மற்றும் அதைத் தொடர்ந்த மோதல்களுக்குப் பிறகு அதிலிருந்து இன்று வரை பலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற விடயத்தின் அடிப்படையில் மோதல்கள் தூரதிஷ்டவசமாக விரிவடைந்து சென்றாலும், இஸ்ரேலுக்கு மாத்திரமன்றி அதிகாரம் படைத்த இஸ்ரேல் சார்பு குழுக்களுக்கும், அந்தச் சிந்தனை முகாமுக்கும் பலத்த அடியை ஹமாஸ் போராளிகளின் தாக்குதல் காண்பிப்பதாகவும், அம்முகாம் கண்ட பலத்த தோல்வியுமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பலஸ்தீனில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடாகும் என்றும், நாங்கள் அமைதியை விரும்புகின்றோம் என்பதுடன் பலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் தேசியம், அரச நிர்வாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இது சர்வதேச அளவில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும் என்றும், பன்முக பார்வையில் பலஸ்தீன சுதந்திர தேசத்துக்குச் சர்வதேசம் தற்போதேனும் ஒன்றுபடாவிட்டால் மனிதாபினம் தோல்வியட்டதாகவே அர்த்தப்படும் என்றும், மனிதாபின தோல்விக்கு இதை விட முன்ணுதாரனம் வேறில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை உங்களுடன் இருக்கின்றது என்பதை பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் கலந்து கொண்டார்.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உடைமையில் கசிப்பு வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது!
Next Article வல்வெட்டித்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?