வல்வெட்டித்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் (வயது -63) என்பவரே நேற்று(ஒக்ரோபர் 16)காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இரவு படுக்கையில் இருந்து அவரைக் காலையில் காணாத நிலையில் தேடியபோது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற் கொண்டார்.

சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரதே பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி உத் தரவிட்டார்.

Share this Article