ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களான ஊர்காவற்றுறை ,அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் பல ஏக்கர் கணக்கான காணிகள் மற்றும் பல வீடுகள் பராமரிப்பு அற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதனால் இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு கைவிடப்பட்ட காணிகள் மற்றும் வீடுகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பிரதேசத்தினை உரிய முறையில் அழகாக பராமரிக்கும் பொருட்டும் சபையின் 11ஆவது அமர்வில் “பராமரிப்பு அற்ற காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ” எனும் தீர்மானம் ஊர்காவற்றுறை சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகள் மற்றும் வீடுகளை உரிய முறையில் பராமரிப்பதற்கு உரிமையாளர்களுக்கு பிரதேச சபையினால் கால அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்கள் உரிமையின் கீழ் உள்ள காணிகள் மற்றும் வீடுகளை உரிய முறையில் துப்புரவு செய்து பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் அதனை மீறி பராமரிக்கப்படாத காணி மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படாடுள்ளது