படுகொலை செய்யப்பட்ட யாழ். மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (மாரச் 6) மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு வவுணதீவு நாவல்தோட்டம் மாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நடைபெற்றது.
அதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாமனிதர் கிட்ணன் சிவநேசன் திருவுருவ படத்துக்கு மாவீரர் கங்காவின் தாயாரான தம்பிபோடியார் அமராவதி ஈகைச்சுடர் ஏற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.