யாழ்ப்பாணம்- அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்த கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அண்மைக்காலமாக பசுவதை அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த சம்பவம் நேற்று (09) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை சில கும்பல்கள் இறைச்சிக்காக அவற்றை கொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கும்பல்களுக்கு எதிராக தீவக மக்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில், இந்தக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துச் செல்வதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்