“நெடுவூர்த்திருவிழா” – 2024 சிறப்பாக நடந்து முடிந்த நான்காம் நாள் இரவு கலை நிகழ்வுகள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 04 ஆம் நாள் இரவு நிகழ்வுகள் ஊரும் உறவும் அமைப்பின் உறுப்பினர் அ. கொண்சியஸ் தலைமையில் இடம்பெற்றது.

கலை நிகழ்வுகள் ஊடாக தங்கள் திறமைகளை முன்பள்ளி மற்றும் மாவிலித்துறை றோ. க. வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இசை நிகழ்வும் சிறப்புடன் இடம்பெற்றது.

இன்றையதினம் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களிற்கான பரிசில் வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது. இதன்போது மாணவர்களுக்கான சிறப்பு பரிசில்களை இன்றைய நிகழ்வின் விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.

Share this Article