“நெடுவூர்த்திருவிழா” – 2024 இரண்டாம் நாள் நிகழ்வுகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகவுள்ள  “நெடுவூர்த்திருவிழா” இரண்டாம் நாள் (ஆகஸ்ட் 05) நிகழ்வுகள் விபரம் கிடைத்துள்ளது.

இரண்டாம்  நாள் (ஆகஸ்ட் 05) காலை 6.00 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஒட்ட நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது.

காலை 9.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு ஸ்ரார் விளையாட்டு கழக மைதானத்தில் மென்பந்து துடப்பாட்டப் போட்டிகள் இடம்பெறும்.

தொடர்ந்து இன்றைய நிகழ்வுக்கான விருந்தினர்களை வரவேற்றல் இடம்பெறுவதுடன் தொடரந்து மண்டப வளாகத்தில் கண்காட்சி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுவதுடன் மாலை 5.30 மணிக்கு கலை நிகழ்வுகளும் இடம்பெறும் என ஊரும் உறவும் நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article