“நெடுவூர்த்திருவிழா” – 2024 இரண்டாம் நாள் , சிறப்பாக நடந்து முடிந்த – மரதன் ஓட்டம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் இரண்டாம் நாள் (ஆகஸ்ட் 05) நிகழ்வாக மரதன் ஓட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இரண்டாம்  நாள் (ஆகஸ்ட் 05) காலை 7.00 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஒட்ட நிகழ்வுகள் இடம்பெற்று முடிவடைந்துள்ளது.

பெண்களுக்கான போட்டி நெடுந்தீவு மேற்கு புதுக்கடையில் இருந்தும் ஆண்களுக்கான போட்டி பெரிய துறையிலும் ஆரம்பமாகி நெடுந்தீவு மாவிலித்துறை தனிநாயகமடிகள் சுற்றுவட்டத்தில் நிறைவடைந்தது.

 

இப்போட்டியில் ஆண், பெண் இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் நிகழ்வு இடம்பெற்ற வீதி எங்கும் ஊரின் உறவுகள் வீர வீராங்கனைகளுக்கு  பெரும் ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article