நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும் மரங்களையும் வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 08) காலை 10:00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றில் இலகு வாகபயணிக்கக் கூடியதாகவும், போக்குவரத்து சபை பேரூந்து உட்பட ஏனையவாகனங்கள் செல்வதற்கும் இலகுவாக மரக்கிளைகளையும் வெட்டி அகற்றப்படவுள்ளது.
நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியூடான போக்குவரத்து செய்வதில் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் பற்றியும் இதனை தீர்ப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பிலும் நேற்றையதினம் (டிசம்பர் 05) சமூக மட்ட பிரதிநிதிகளுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் இணையவழி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியதுடன் அதன்மூலம் இச்செயற்பாட்டினை நெடுந்தீவில் உள்ள அனைத்துஅமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடனும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் எனவே இப்பணியில் அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறும் ஊரும் உறவும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.