நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலையத்தின் மீள் தொடர் செயற்பாடு இன்றையதினம் (டிசம்பர்17) “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினரின் அனுசரணையுடன் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கான ஆரம்பகட்டமாக வாசகர்பகுதிக்கான தினசரிப் பத்திரிகைகள் இன்று தொடக்கம் தொடர்ச்சியாக போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நூல் இரவல் கொடுக்கும் பகுதியினை ஆரம்பிக்கும் வகையிலும் சிறுவர்களது வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் ஒரு தொகுதி சிறுவர் நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நூலகச் செயற்பாடுகளுக்கும் , வாசிப்பை வளரும் தலைமுறையினரிடம் வளர்த்தெடுக்கும்நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் அமர்வுகட்கும் வழிகாட்டலும் அனுசரணையும் வழங்கவுள்ளதாக இன்றைய ஆரம்ப நிகழ்வில் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாசகர் பகுதி , நூலகம் என்பன மீள இயங்கவைக்கும் செயற்பாட்டுடன் தினசரிபத்திரிகைகள்,நூலகர்கொடுப்பனவுகளுக்கான அனுசரணையையும் ,வாசிப்பை வளரும்தலைமுறையினரிடம் வளர்த்தெடுக்கும் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” ஊக்குவிக்கும் அமர்வுகட்கும் இணைந்து வழிகாட்டலும்அனுசரணையும் “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினர் வழங்கிவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.