நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண், பெண் அணிகள் தேசிய மட்டப் போட்டியில் நாளை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண், பெண் இரு அணிகளும் தெரிவுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(செப். 14)  யாழ் –  பண்ணை கடற்பகுதியில் இடம்பெற்ற தெரிவுப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக செயற்பட்டு நாளைய தினம் (செப். 16) மண்டைதீவில் அமைந்துள்ள படகு வலித்தல் திடலில் இடம்பெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட மாகாணமட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட படகுவலித்தல் பயிற்சியில் இம் மாணவர்கள் ஈடுபட்டதுடன் தேசிய மட்டப் போட்டிக்கான தயார்படுத்தலைமாகாண, வலய, கடற்படை படகுவலித்தல் பயற்சி அணியினர் மேற்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

Share this Article