நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி – சித்திரபாட ஆசிரியர் இல்லாத நிலையிலும் போட்டியில் வெற்றி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் இந்துக் கல்லூரியில் கடந்தவாரம் நடைபெற்ற யாழ் மாவட்ட மாணவர்களுக்கு இடையிலான சித்திரப் போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவி ஜெயரூபன் அதிஸ்ரா (தரம்10) மாவட்டத்தில் பத்தாவது இடத்தினை பெற்றுபாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்றமைக்காக வெற்றிச் சான்றிதழ் , ரூபா 8500.00 பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசில்களையும் பெற்றுக்கொண்ட இம் மாணவி பாடசாலைக்கு சித்திரபாட ஆசிரியர் நியமிக்கப்படாத நிலையிலும் தனதுமுயற்ச்சியால் இவ் வெற்றியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article