நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற மரநடுகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் நிறைவில் போட்டிகள் இடம்பெற்ற  நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்  மரநடுகை வைபவ ரீதியாக இடம்பெற்றது.

நெடுந்தீவுக்கான பதில் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியசீலன்  மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர், ஆசிரியர், மாணவர்கள் என பலர் மரக்கன்றுகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவு கோட்ட மட்ட போட்டிகள் நேற்றையதினம் ஆரம்பமாகி இன்று (ஜூன்12) பரிசளிப்பு வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

Share this Article