2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்இன்று(ஏப்ரல்26) மாலை வெளியாகிய நிலையில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் செல்வன் பிரியதர்ஷன் ஜக்சன்றாஜ் கலைப்பிரிவில் 2A B பெறுபேற்றைப்பெற்றுள்ளார்.
நெடுந்தீவு கோட்டத்தில் முதல்நிலையினையும் , மாவட்டநிலையில் 83 ஆவது நிலையினைப்பெற்று பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்று பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமை சேரத்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்துவதில் பெருமைகொள்கின்றோம்.
இதேவேளை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றிய நிலையில் 14 மாணவர்கள் 3 பாடங்கிலும் சித்தியடைந்துள்ளனர்.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்து எவரும் பரீட்சைக்கு தோற்றவில்லை என்பதுடன்,
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் 05 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியதுடன் 04 மாணவிகள் 3 பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.